இந்தியா

காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுடும் இந்து மகா சபை தலைவர்...

காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு கொண்டாடிய நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தந்தி டிவி
காந்தி நினைவு நாளான நேற்று, காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு கொண்டாடிய நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்திரப்பிரதேசம் மாநிலம் அலிகாரில் உள்ள இந்து மகா சபை அலுவலகத்தில் நேற்று காந்தியின் உருவபொம்மையை வைத்து, அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான பூஜா சகுன் பாண்டே துப்பாக்கியால் சுட்டார். அத்துடன் கோட்சே உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, அடையாளம் தெரிந்த 8 பேர், அடையாளம் தெரியாத 4 பேர் என மொத்தம் 12 பேர் மீது அலிகார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டதாக காவல் உதவி ஆணையர் நீரஜ் தெரிவித்துள்ளார்.

BREAKING || லண்டனே அதிருதே... CM விஜய்யை காண குவிந்த பிரமாண்ட படை

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்