நேபாள பேரிடர் - இமாச்சலுக்கு எச்சரிக்கை நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள், இமயமலைப் பிராந்தியத்திற்கே எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். நேபாளத்தைப் போன்ற புவியியல் அமைப்பைக் கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில், அமைக்கப்படும் அணைகள், நீர்மின் திட்டங்கள் மற்றும் மலைகளைக் குடைந்து அமைக்கப்படும் நெடுஞ்சாலைகள் பேரிடர் அபாயத்தை அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய மெகா திட்டங்களைத் தொடங்குவதற்கு முன்பு, அப்பகுதியின் தாங்குதிறன் குறித்து அறிவியல் ரீதியான ஆய்வு அவசியம் என வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.