புல்வாமாவில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி வருவதாக பாகிஸ்தான் உளவு அமைப்பு, இந்திய வெளியுறவு துறையிடம் தெரிவித்துள்ளது. புல்வாமா பகுதியில் உள்ள அவந்திப்போரா என்ற இடத்தில் மீண்டும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை கொண்டு தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளனர். இது குறித்து பாகிஸ்தானுக்கு உளவு தகவல்கள் கிடைத்துள்ளன. உடனடியாக அங்கு உள்ள இந்திய தூதரகத்தில் இந்த தகவலை பாகிஸ்தான் உளவு அமைப்பு பகிர்ந்து கொண்டது. இதே போன்று அமெரிக்காவுக்கும் பாகிஸ்தான் தகவல் கூறி உள்ளது.எதிர்காலத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம்சாட்டக்கூடாது என்பதற்காகதான் தகவல் பகிர்ந்துகொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.