கேரளத்தில் மழையின் கோர தாண்டவம்.. அடுத்த 5 நாட்களுக்கு ALERT!
#KeralaRain #KeralaWeather #HeavyRain #RainAlert #WeatherAlert #KeralaFlood #IMDAlert
கேரளம் - கோட்டயத்தில் கனமழை - காட்டாற்று வெள்ளம் கேரள மாநிலம் கோட்டயத்தில் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது... கனமழையால் கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கோட்டயம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளான தீக்கோய், வாகமன், பூஞ்சார் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மீனாச்சில் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன், வாகமன்-எரட்டுப்பேட்டை சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது பல இடங்களில் சிறிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மாநிலத்தில் கனமழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது