இந்தியா

சபரிமலை பக்தர்களின் பஸ்ஸை கவிழ்த்த கனமழை..! எருமேலி மலையில் பயங்கரம்

தந்தி டிவி

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள், பேருந்து மூலம் சபரிமலைக்கு புறப்பட்டனர். எருமேலி அருகே பேருந்து வந்த போது, கனமழை, அடர் மேகமூட்டம் நிலவி உள்ளது. இதன் காரணமாக வளையில் திரும்ப முயன்ற பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. பேருந்தில் பயணம் மேற்கொண்ட 43 பேரில் 20 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீஸ் மற்றும் தீயணப்பு துறையினர், காயம் அடைந்தவர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். எருமேலி பகுதியில் மோசமான வானிலை நிலவுவதால் பக்தர்கள் கவனத்துடன் செல்ல, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்