உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் பெண் பாலியல் கொலை வழக்கில், சாட்சியயாக இருக்கும் விக்ரமிடம் சிபிஐ விசாரித்து வருகிறது. 19 வயது இளம்பெண் ஒருவர் உடலில் காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், போலீசாரே அவரது உடலை எரித்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தை, சிபிஐ விசாரித்து வருகிறது. சாட்சியாக உள்ள விக்ரமிடம், சிபிஐ அதிகாரிகள், பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரித்தனர்.