Haryana | Fire Accident | தொழிற்சாலையில் கொளுத்துவிட்டு எரிந்த தீ | வானுயர எழுந்த ராட்சத கரும்புகை #haryana #fireaccident #rescue #thanthitv தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - வானுயர எழுந்த கரும்புகை ஹரியானா மாநிலம் கர்னாலில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நாக்லா சவுக் அருகே திடீரென பற்றிய தீ வேகமாக பரவியதால், ராட்சத கரும்புகை வானளாவியபடி பல கிலோமீட்டர் தூரம் வரை காணப்பட்டது. தகவலறிந்து விரைந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பாதுகாப்பு நடவடிக்கையாக அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.