ஹரியானா மாநிலம் ரோத்தக்கில், மது போதையில் இருந்த ஒருவர் தனது 4 வயது மகளை தூக்கி தரையில் வீசி, கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைக் கண்ட சிறுமியின் தாய் ஓடிவந்து குழந்தையை மீட்டார். இந்த தாக்குதலில் சிறுமியின் தோள்பட்டையில் கடுமையான காயம் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.