இந்தியா

போலீஸ் குடியிருப்புக்குள் கைவரிசை- பெண் காவலர் வீட்டில் கொள்ளை-திருச்சியில் ஷாக்

தந்தி டிவி

திருச்சி அருகே காவலர் குடியிருப்பில் உள்ள பெண் காவலர் வீட்டில் 4 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். திருச்சி ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வரும் யுவராணி என்பவர் கே.கே. நகர் காவல் துறை குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் நான்கு சவரன் நகையை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து யுவராணி கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவலர் குடியிருப்பிலேயே திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | CM விஜய்க்கு சல்யூட் அடித்த மாற்றுத்திறனாளி மாணவி..சட்டென முதல்வர் செய்த செயல்

TN People | CM விஜயின் 100 நாள் ஆட்சி - சும்மா ல்ல என்னென்ன செஞ்சிருக்காருனு சொல்லியே காட்டிய மக்கள்

CM Vijay | Independence Day | கோட்டை கொத்தளத்தில் முதல்முறையாக விருதுகளை வழங்கிய CM விஜய்

BREAKING || "BREAKING || "இந்த 3 மாசத்தில் என்ன மாற்றம் நடந்திருக்கு?" - உறுதியாக அழுத்தி சொன்ன CM விஜய்

BREAKING || "இந்த விழாவில் என்னை பேச வச்சிருக்கீங்க" - CM விஜய் உணர்ச்சி பொங்க சொன்ன வார்த்தை