இந்தியா

"கோவில் மீது தான் ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ளது" - அயோத்தியை தொடர்ந்து பரபரப்பில் காசி..!

தந்தி டிவி

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியானது, கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக, தொல்லியல் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞானவாபி மசூதி குறித்து, ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு வாரணாசி நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டிருந்தது. இதனை, அலகாபாத் உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி, தொல்லியல் துறையின் ஆய்வு அறிக்கை, சீலிட்ட கவரில், வாரணாசி நீதிமன்றத்திடம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அறிக்கையானது, இந்து மற்றும் முஸ்லீம் தரப்புக்கு வழங்கப்பட்டு, பதில் மனு கேட்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் ஞானவாபி மசூதி இருந்த இடத்தில் மிகப்பெரிய இந்து கோயில் இருந்ததாகவும், அந்த கோயிலின் தூண்களில் சிறிது மாற்றம் செய்து, மசூதி எழுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஞானவாபி வளாகத்தின் மேற்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர், ஏற்கனவே இருந்த ஹிந்து கோவிலின் ஒரு பகுதி என்றும், கோயிலில் இருந்த சிலைகள், மசூதிக்கு அடியில் புதைக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு