சூரத் நகரில் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து மூன்று நாள் விழிப்புணர்வு பிரசாரம் நேற்று முதல் தொடங்கியது. இதில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களிடம் அபராத தொகையாக 100 ரூபாய் வசூலிப்பதற்கு பதிலாக, அந்த தொகைக்கு ஹெல்மெட்டை பரிசாக வழங்கி வருகின்றனர். பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி, இதுவரை 500-க்கு மேற்பட்டவர்களுக்கு ஹெல்மெட்கள் வழங்கப்பட்டுள்ளன.