உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில், ரமேஷ் மாதுர் என்னும் கோவில் அர்ச்சகர், உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடலை தகனம் செய்ய கொண்டு செல்ல, ஆட்கள் யாரும் இல்லை. இதனையடுத்து, அவரது இல்லத்தின் அருகே வசித்து வந்த, இஸ்லாமியர் ஒருவர் இடுகாடு வரை, ரமேஷ் மாதுரின் உடலை தோள்களில் சுமந்து சென்றார். ரமேஷ் மாதுரின் மூத்த மகன், டெல்லியில் இருந்து வர முடியாததால், இறுதி சடங்குகளை, இஸ்லாமியரே முன்னின்று நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.