இந்தியா

பிரதமரின் பட்டப்படிப்பு சான்றிதழ் விவகாரம் - குஜராத் உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

தந்தி டிவி

பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்க்கு அளிக்கப்பட்ட சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

இதுதொடர்பாக குஜராத் பல்கலைக்கழகம் தாக்கல் செய்த அவதூறு வழக்கை விசாரித்த அகமதாபாத் நீதிமன்றம், ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங்குக்கு சம்மன் அனுப்ப கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் தாக்கல் செய்த மனுவை குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி சமீர் எஸ். தவே விசாரித்தார். அகமதாபாத் நீதிமன்றத்தின் சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்ததுடன், மனு தொடர்பாக பதில் அளிக்க குஜராத் பல்கலைக்கழக பதிவாளர் பியூஷ் பட்டேலுக்கு உத்தரவிட்டார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்