இந்தியா

540 அடி ஆழ்துளை கிணற்றில் இருந்து 30 மணி நேரத்திற்கு பிறகு பிணமாக வெளியே வந்த 18 வயது இளம்பெண்

தந்தி டிவி

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் உள்ள கந்தேரை கிராமத்தில் 540 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 18 வயது இளம்பெண் திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு விழுந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, எல்லைப் பாதுகாப்புப் படைக் குழுவினரும் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். 490 அடி ஆழத்தில் சிக்கியிருந்த அந்த பெண்ணுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டது. சுமார் 30 மணி நேர போராட்டத்திற்குப் பின் அந்த பெண்ணை ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியே எடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சுயநினைவின்றி இருந்த அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்