இந்தியா

37-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்: சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைப்பு

கோவாவில் நடைபெற்ற 37-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைப்பை அறிவித்தார்.

தந்தி டிவி

காபி தொடர்பான பானங்கள் மீதான ஜி.எஸ்.டி. 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதம் மற்றும் கூடுதல் வரி 12 சதவீதம் என 40 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ஓட்டல்களை பொறுத்தவரை தங்கும் அறைகளுக்கு ஒரு நாள் வாடகை கட்டணம் ஆயிரம் ரூபாய் வரை இருந்தால் ஜி.எஸ்.டி. இல்லை என்று அவர் கூறினார். 1,001 ரூபாயிலிருந்து 7,500 ரூபாய் வரை தற்போது 18 சதவீதமாக உள்ள வரி 12 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும், 7,500 ரூபாய்க்கு மேல்

ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

உணவு சப்ளை கேட்டரிங்க்கு ஜி.எஸ்.டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உள்ளீட்டு வரி கடன் சலுகையுடன் குறைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கப்பல் எரிபொருளுக்கு ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும், சரக்கு ரயில் எரிபொருளுக்கு ஜி.எஸ்.டி. 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாத சில குறிப்பிட்ட ராணுவ பொருட்கள் இறக்குமதிக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார். உலர்ந்த புளி மற்றும் இலைகள், பூக்கள், மட்டைகள் ஆகியவற்றால் செய்யப்பட்ட தட்டு, டம்ளர்களுக்கு 5 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி வரி நீக்கப்படுவதாகவும், நெய்த மற்றும் நெய்யப்படாத பாலியெத்திலீன் பைகளுக்கு ஒரே சீராக 12 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 10 முதல் 13 பேர் வரை பயணம் செய்யும் பெட்ரோல் வாகனங்களுக்கான செஸ் வரிக்கான இழப்பீடு 1 சதவீதமாகவும், அதே தகுதி கொண்ட டீசல் வாகனங்களுக்கான செஸ் வரிக்கான இழப்பீடு 3 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும், பாதாம் பாலுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். வெட் கிரைண்டர்களுக்கு ஜி.எஸ்.டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், ஜிப்புகளுக்கு 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும்,

வைரம் தொடர்பான பணிகளுக்கு 5 சதவீதத்தில் இருந்து 1.5 சதவீதமாகவும், எந்திர பணிகளுக்கு 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும் ஜி.எஸ்.டி. குறைக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார். மீன் உணவு மற்றும் சக்கரங்கள் போன்ற இதர விவசாயம் சார்ந்த கருவிகளுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும், மொத்தம் 20 பொருட்கள் மற்றும் 12 சேவைகளுக்கு வரிகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார். இந்த மாற்றம் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் தெரிவித்த்தார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு