இந்தியாவில் ஆயிரத்து 300 க்கும் மேற்பட்ட போலி ஏற்றுமதி நிறுவனங்கள், போலியான கணக்குகள் மூலம் ஆயிரத்து 875 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மோசடி செய்துள்ளன. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களில், இந்த போலி நிறுவனங்களை அடையாளம் காணும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிக்கல் உள்ள ஏற்றுமதியாளர்கள் என 7 ஆயிரத்து 516 நிறுவனங்களை மத்திய அரசு அடையாளப்படுத்தி உள்ளது. சுங்க கட்டணம், வருமான வரி, ஜிஎஸ்டி மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் ஆகியவற்றில் செயல்பாடுகள் அடிப்படையில் போலி நிறுவனங்கள் அடையாளம் செய்யபடுகின்றன.