இது தொடர்பாக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கடந்த 5 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபல், கேள்வி எழுப்பி உள்ளார்.
சரக்கு மற்றும் சேவை அமலாக்கத்தின் பின் விளைவுகள் குறித்து உரிய புரிதல் இல்லாமல் அரசு அமல்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் தனியார் துறை மற்றும் தொழில்துறை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கபில்சிபல் தெரிவித்துள்ளார். தனியார் முதலீடு குறைந்துள்ளதுடன், அதிக வருவாய் ஈட்டும் பிரிவினர் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருவதாகவும் கபில்சிபல் தெரிவித்துள்ளார். வருமான வரி தளம் விரிவடைந்துள்ள நிலையில், நேரடி வரி வருவாய் குறைந்துள்ளதாகவும் கபில்சிபல் தெரிவித்துள்ளார். தனியார் துறையை காப்பாற்ற அரசுக்கு கோரிக்கை விடுக்கும் அதேநேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தனியார் துறையில் வேலையிழந்து வரும் நிலையை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் நிதியமைச்சர் அமைதி காப்பது ஏன்? என்றும் கபில்சிபல் கேள்வி எழுப்பி உள்ளார்.