ஜூன் மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி தொகை ரூபாயாக 90 ஆயிரத்து 917 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ஆக 18 ஆயிரத்து 980 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி ஆக 23 ஆயிரத்து 970 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ஆக 40 ஆயிரத்து 302 கோடியும் கிட்டியுள்ளது. இதில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய பங்கை செலுத்திய பிறகு மத்திய ஜிஎஸ்டி வருவாயாக 32 ஆயிரத்து 305 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி வருவாயாக 35 ஆயிரத்து 87 கோடி ரூபாயும் கிட்டியுள்ளது