தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி காஜா முகைதீன் வேலையை விட்டுவிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் சேவையில் ஈடுபட்டுள்ளார். இந்த பொதுசேவை, தமது மனதிற்கு முழு திருப்தி அளிப்பதாகவும், வாழ்வின் உன்னதத்தை புரிந்து கொண்டதாகவும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.