கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே, பேருந்து நிலையத்தில் நடந்து சென்ற முதியவர் மீது அரசு பேருந்து மோதிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... அதனை பார்க்கலாம்...
திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றங்கரை அரசு பேருந்து நிலையத்தில், நடந்து சென்ற 76 வயது முதியவர் மீது பின்னால் வந்த பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் முதியவரின் கால் பேருந்தின் அடியில் சிக்கி நசுங்கியது. இதனை கண்ட பின் பயணிகள் அலறி அடித்து அச்சத்தில் ஓடி உள்ளனர் உடனடியாக சக பேருந்து பயணிகள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.