இந்தியா

Google Map | அதலபாதாளத்தில் தள்ளிய கூகுள் மேப்.. 4 பேருக்கு நேர்ந்த கதி

அதலபாதாளத்தில் தள்ளிய கூகுள் மேப்.. 4 பேருக்கு நேர்ந்த கதி

thanthitv

கூகுள் மேப்பை நம்பி சென்றதால் விபரீதம் உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூரில், கூகுள் மேப்பை நம்பிச் சென்ற கார் ஒன்று சாக்கடையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தத்ரியிலிருந்து கிதௌருக்கு திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயணித்த கார், கூகுள் மேப்ஸ் காட்டிய குறுக்கு வழியைப் பின்பற்றியதாக கூறப்படுகிறது. அந்தப் பாதையில் இருந்த ஆழமான சாக்கடையில் கார் விழுந்ததில், தண்ணீரின் அழுத்தத்தால் கதவுகள் திறக்க முடியாமல் பயணிகள் உள்ளே சிக்கிக்கொண்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவர்கள் உயிருக்கு போராடிய நிலையில், தகவலறிந்து வந்த காவல்துறையினர் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை உடைத்து நான்கு பேரையும் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்