கணைய நோயால் பாதிக்கப்பட்டு வந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், 4 மாதங்களுக்கு பிறகு தலைமை செயலகத்திற்கு இன்று வந்தார். கணைய நோயால் பாதிக்கப்பட்ட மனோகர் பாரிக்கர், கடந்த பிப்ரவரி மாதம் முதல் அதற்குரிய சிகிச்சை பெற்று வருகிறார். புத்தாண்டு தினமான இன்று, தலைநகர் பானாஜியில் உள்ள தலைமை செயலகம் வந்தடைந்த அவர், அமைச்சரவை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.