இந்தியா

டிக் டாக் மோகத்தில் கணவரை பிரிந்த பெண் - பெண் நண்பருடன் வாழ சென்றதாக தகவல்

தொழில் நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தாவிட்டால் அது குடும்பத்தை சீரழித்துவிடும் என மீண்டும் நிரூபித்துள்ளது ஆந்திராவில் நடந்த ஒரு சம்பவம்.

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் கர்னூல் ஆதோணியை சேர்ந்த சுமங்கலி - கங்காதர் தம்பதியின் மூத்த மகள் அர்ச்சனாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரவிக்குமாருக்கும் 13 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

அர்ச்சனா - ரவிக்குமார் தம்பதியின் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையில், அர்ச்சனாவின் சகோதரி லக்ஷ்மி மூலம் ஆபத்து வந்துள்ளது.

பெங்களூருவுக்கு பணி நிமித்தமாக சென்ற லக்ஷ்மிக்கு, அஞ்சலி என்பவருடன் நட்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நட்பு அர்ச்சனாவுடன் போனில் அடிக்கடி பேசுவதில் இருந்து, டிக் டாக் வீடியோ பதிவு செய்வது வரை விரிவடைந்துள்ளது.

ஒரு கட்டத்தில் அஞ்சலி ஒரு வாரத்திற்கும் மேலாக அர்ச்சனா வீட்டிற்கு வந்து தங்கிய நிலையில், இருவருக்கும் இடையிலான நெருக்கம் அதிகரித்துள்ளது.

இதனை அர்ச்சனாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டித்த நிலையில், அர்ச்சனா அஞ்சலி உடன் தொடர்ந்து தொலைபேசியில் ரகசியமாக பேசி வந்துள்ளார். இதனை அறிந்த கணவர் ரவிகுமார் கண்டித்த நிலையில், பெற்றோர் வீட்டிற்கு அர்ச்சனா சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அர்ச்சனா 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு விட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.

பலஇடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், காவல் நிலையத்தில் அர்ச்சனாவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். தங்களின் மகளை, அவரின் தோழி அஞ்சலி எங்கோ அழைத்து சென்று இருக்கலாம் என அர்ச்சனாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

டிக் டாக் மோகத்தால் தங்கள் பெண்ணின் வாழ்க்கையை, அஞ்சலி சீரழித்து விட்டதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தொழில் நுட்பத்தின் சீரழிவில் இருந்து இளைய தலைமுறையை எவ்வாறு மீட்கப் போகிறோம் என்ற சவால் பெற்றோருக்கு உருவாகி வருகிறது...

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்