இந்தியா

Tirupathi | இன்று திருப்பதியில் கருட சேவை..இப்போதே குவிய தொடங்கிய பக்தர்கள்

இன்று திருப்பதியில் கருட சேவை..இப்போதே குவிய தொடங்கிய பக்தர்கள்

thanthitv

#tirupathi #thanthitv திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை இன்று இரவு 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. கருட சேவையை காண காலை முதலே நான்கு மாட வீதிகளிலும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 700 சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. திருப்பதி மலைப்பாதையில் 24 மணி நேரமும் வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளன.மேலும், திருப்பதியில் இருந்து திருமலைக்கு 650 பேருந்துகள் மூலம் 5,500 டிரிப்புகள் இயக்கப்பட உள்ளதுடன், பக்தர்களுக்கு இலவச அன்னப்பிரசாதம், பால் மற்றும் மோர் வழங்கவும் தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Nellai | Fight | இஸ்டாவில் சாதி ரீதியான பதிவால் உண்டான மோதல்..

TN Govt | TamilNadu | 38 மாவட்டங்களுக்கும் புதிய அதிகாரிகள்..அதிரடி காட்டிய TN அரசு

Vijay Sethupathi | காத்துவாக்குல சுற்றிய கான்ட்ரவர்சி-உருவான இடத்திலேயே முடித்து வைத்த விஜய் சேதுபதி

Anna university|அண்ணா பல்கலை மாணவர் காய்ச்சலால் பலியான சம்பவம் -ஃபுல் கண்ட்ரோல் எடுத்த மருத்துவ டீம்

CM Vijay | By Election | இடைத்தேர்தல்..அதிரடியாக களமிறங்கும் CM விஜய், அமைச்சர்கள்,அரசியல் தலைவர்கள்