இந்தியா

முன்னாள் மிஸ் புனே தற்கொலை விவகாரம் - கணவருக்கு லுக் அவுட் நோட்டீஸ்

முன்னாள் மிஸ் புனே தற்கொலை விவகாரம் - கணவருக்கு லுக் அவுட் நோட்டீஸ்

thanthitv

மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த முன்னாள் ‘மிஸ் புனே“ அழகியான 33 வயது த்விஷா சர்மா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் வழக்கில், அவரது கணவர் சமர்த் சிங்குக்கு எதிராக காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

திருமணமாகி 5 மாதங்களிலேயே த்விஷா உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமை மற்றும் குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 6 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தலைமறைவாக உள்ள அவரது கணவர் சமர்த் சிங்கை கைது செய்ய பல தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அவர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில், அனைத்து விமான நிலையங்களுக்கும் எல்லைச் சோதனைச் சாவடிகளுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது...

இதற்கிடையே, இரண்டாவது உடற்கூறு ஆய்வு நடைபெறும் வரை தங்களது மகளின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என த்விஷாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழக அரசியலில் 59 ஆண்டுகளுக்கு பின் புது வரலாறு

CM Vijay | TN Police | Chennai |வேட்டையில் இறங்கிய TN போலீஸ்.. சென்னையில் ஒரேநாளில் 133ரவுடிகள் கைது

TN Govt | Medical Strike | தமிழ்நாடு முழுவதும் நடந்த மெடிக்கல் முழு அடைப்பு போராட்டம் நிறைவு

BREAKING || CM VIJAY | முதல்வரானதும் விஜய் போட்ட முதல் கையெழுத்து - இன்று நடந்த அதிரடி மாற்றம்

Chennai High Court | TN Govt | CM Vijay | "நல்ல முடிவு.." தமிழக அரசுக்கு ஹைகோர்ட் பாராட்டு