கேரளாவில் சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளானதாக திருவனந்தபுரம் சார்பு நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை சமரசம் செய்து கொள்வதற்காக 1 கோடியே 30 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கேரள முன்னாள் முதன்மை செயலாளர் ஜெயக்குமார் சிபாரிசு செய்திருந்தார். இந்த சிபாரிசை ஏற்று கொண்ட கேரள அமைச்சரவை, அந்த பணத்தை கொடுக்க தற்போது ஒப்புக் கொண்டுள்ளது. ஏற்கனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி வழங்கிய 50 லட்சம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் சிபாரிசு செய்த 10 இலட்சம் ரூபாய் ஆகியவற்றை தொடர்ந்து தற்போதைய இந்த தொகையை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.