கேரளாவில் கன மழையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கனமழையால் இரண்டாயிரத்து 101 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள அரசு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது. இதனையடுத்து கடந்த 4 நாட்களாக கேரளாவில் இரு பிரிவுகளாக பிரிந்து பல மாவட்டங்களில் மத்தியக்குழு நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.