இந்தியா

பத்மநாப சுவாமி கோவில் விழாவுக்காக, திருவனந்தபுரத்தில் விமானங்கள் இயக்கம் நேற்று 5 மணி நேரம் நிறுத்தப்பட்டது.

தந்தி டிவி

திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம், புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோவில் அருகே அமைந்துள்ளது. இக்கோயில் புனித நிகழ்வுக்காக, ஆண்டுக்கு 2 முறை இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்படுகிறது. அதாவது அக்டோபர்-நவம்பர் மாதங்களில் வரும் 'ஐப்பசி ஆறாட்டு' மற்றும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் வரும் பங்குனி விழாவுக்காக விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்படுவது வழக்கம். அந்த வகையில், பத்மநாப சுவாமி கோயிலில் நேற்று 'ஐப்பசி ஆறாட்டு' விழா நடைபெற்றது. இதற்காக கோயிலில் இருந்து சாமி சிலைகளை சங்குமுகம் கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று அங்கு ஆறாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த சாமி ஊர்வலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதையை கடந்து கடற்கரைக்கு சென்றது. இதற்காக, நேற்று மாலை 4 மணி முதல், இரவு 9 மணி வரை, 5 மணி நேரம் விமானங்கள் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டது. மன்னர் காலம் முழுவதும் பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை தற்போது, அதானி குழுமம் விமான நிலையத்தின் நிர்வாகத்தை ஏற்ற பிறகும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்