கோழிக்கோடு விமான விபத்தின் போது மீட்பு பணிகள் எப்படி நடைபெற்றன என்பது பற்றிய வீடியோக்கள் தற்போது வெளியாகி வருகின்றன. கனமழை, கொரோனா அச்சம் பற்றி எதுவும் கவலைப்படாத உள்ளூர் மக்கள், உயிருக்கு போராடிய மக்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ்கள் பற்றாக்குறை காரணமாக உள்ளூர்வாசிகள் பலர் தங்களது சொந்த காரிலேயே, அடிபட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.