இந்தியா

Flight | Aeroplane | பாட்னா To லக்னோ.. மின்னல், ஆலங்கட்டி மழையால் விமானம் சேதம்

பாட்னா To லக்னோ.. மின்னல், ஆலங்கட்டி மழையால் விமானம் சேதம்

thanthitv

Flight | Aeroplane | பாட்னா To லக்னோ.. மின்னல், ஆலங்கட்டி மழையால் விமானம் சேதம் #Flight #Aeroplane #IndiGo பீகாரில் இருந்து லக்னோ சென்ற இண்டிகோ விமானம், நடுவானில் மின்னல் மற்றும் ஆலங்கட்டி மழையால் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பாட்னாவில் இருந்து லக்னோ சென்ற இண்டிகோ விமானம், சுமார் 17 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது பலத்த காற்று, ஆலங்கட்டி மழை மற்றும் இடி மின்னலுடன் கூடிய மோசமான வானிலையில் சிக்கியது. இதனால் விமானத்தின் முன்பகுதி பகுதி பலத்த சேதமடைந்தது. இருப்பினும், விமானிகள் விமானத்தை பாதுகாப்பாக லக்னோ விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினர். விமானத்தில் 104 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் என 110 பேர் இருந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து ஏர்பஸ் ஏ320 விமானம் தொழில்நுட்ப பரிசோதனை மற்றும் பராமரிப்புக்காக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Swiggy, Zomatoக்கு வரி? எதையெல்லாம் மாற்றுகிறது GST கவுன்சில்?

Chennai Road Sinkhole | டைடல் பார்க் ரோட்டில் திடீர் பள்ளம் - உள்ளே விழுந்து கவிழ்ந்த கார்..

Minister Anand Event | மாநாட்டில் அமைச்சர் ஆனந்த்

Thoothukudi 260 விசைப்படகுகளை கடலுக்கு போகவிடாமல் தடுத்த `புரட்டாசி’ சோகத்தில் மீனவர்கள்

Onion Price Hike இல்லத்தரசிகளை கண்ணீர் விட வைக்கும் வெங்காயம் விலை