ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எண்ணெய் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து, இதுவரை எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை. தீ விபத்தின் காரணம் குறித்தும் எந்த தகவலும் இல்லாத நிலையில், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.