#ankitasharmaipsvideo #ayudhapooja
சத்தீஸ்கரில் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, ஆயுத பூஜை விழாவின் போது ஏ.கே-47 துப்பாக்கியால் சுடும் வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவர், ஐ.பி.எஸ் அதிகாரி அங்கிதா சர்மா. அவர் காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற ஆயுத பூஜை கொண்டாட்டத்தின் போது, பாரம்பரிய உடை அணிந்தவாறு ஏ.கே-47 ரக துப்பாக்கியை வானை நோக்கிச் சுட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது துப்பாக்கி கையாள்வதில் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று முன்னாள் ராணுவ அதிகாரிகள், ஐ.பி.எஸ் அதிகாரி அங்கிதா சர்மாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.