இந்தியா

மத்திய பட்ஜெட் விரைவில் தாக்கல் - சம்பிரதாய அல்வா கிண்டும் நிகழ்ச்சி

2021-22 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தந்தி டிவி

2021-22 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி ஆண்டுதோறும் பட்ஜெட் தொடர்பான புத்தகங்கள் அச்சடிக்கப்படும் முன்பு சம்பிரதாயமாக நடைபெறும் அல்வா கிண்டும் நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் அல்வா கிண்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், நிதியமைச்சக உயர்அதிகாரிகள் உள்ளிட்டோர் அல்வா கிண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கொரோனாவால் இந்த ஆண்டு பட்ஜெட் உரை, பொருளாதார ஆய்வறிக்கை தொடர்பான புத்தகங்கள் அச்சடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்