இந்தியா

மகளின் திருமணத்தில் பாடிய தந்தை மயங்கி விழுந்து மரணம்

கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரை பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு பிரசாத்.

தந்தி டிவி

கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரை பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு பிரசாத். திருவனந்தபுரத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரியும் இவரின் இளைய மகள் ஆர்ச்சாவுக்கு ஞாயிறன்று திருமணம் நடைபெறுவதை முன்னிட்டு சனிக்கிழமை மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இன்னிசை கச்சேரியில் உறவினர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க விஷ்ணு பிரசாத் பாடல் பாடினார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மயக்கமடைந்து விழுந்தார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மறுநாள் திருமணம் என்பதால் குடும்பத்தினருக்கு அவர் இறந்தது குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எவ்வித குறைபாடுமின்றி திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து

மறுநாள் காலையில் குடும்பத்தினருக்கு விஷ்ணு பிரசாத் இறப்பு குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டுஅனைவரும் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்