இந்தியா

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் - பிரியங்கா காந்தி கலந்துக்கொள்கிறார்

டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி

டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று டெல்லி எல்லையில் விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சட்டங்களை திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துவிட்டதால் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டாமல் செல்கிறது. சிந்து எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரபிரதேச மாநிலம் ஷகாரன்பூரில் நடந்துக்கொள்ளும் கிசான் மகாபஞ்சாயத்து நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார். அங்கிருக்கும் சகும்பரா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்