Farmer | இழப்பீடு கொடுக்காமல் 10 ஆண்டாக அலைக்கழித்த அதிகாரி.. செருப்பால் அடித்த விவசாயி. பாகல்கோட் மாவட்டத்தில் விவசாயி பசப்பாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலத்திற்கு 10 ஆண்டுகள் கடந்தும் அரசு அதிகாரிகள் இழப்பீடு வழங்காமல் இழுத்தடித்துள்ளனர். இதுகுறித்து அரசு அதிகாரிக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் அதிகாரியை பசப்பா செருப்பால் அடித்தார். இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.