ஒடிசாவில், ஃ பானி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், ராணுவ வீரர்கள் முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தி வரும் ராணுவத்தினர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை செய்து வருகின்றனர். அதேபோல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, தண்ணீர் ஆகியற்றையும் அவர்கள் வழங்கி வருகின்றனர்.