இந்தியா

ஒடிசாவில் கரை கடந்த ஃபானி புயல் : கொட்டி தீர்த்த கனமழை - வேரோடு சாய்ந்த மரங்கள்

ஒடிசா மாநிலத்தில் கரை கடந்த ஃபானி புயல் அம்மாநிலத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

ஃபானி புயல் - ஒடிசா தலைமை செயலாளர் ஆலோசனை

ஒடிசா மாநிலத்தில் ஃபானி புயல் பயங்கர சேதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தலைநகர் புவனேஸ்வரில், அம்மாநில தலைமை செயலாளர் ஆதித்ய பிரசாத் அவசர ஆலோசனை நடத்தினார். அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதனிடையே கோபால்பூர் பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

தயார் நிலையில் பேரிடர் மீட்பு, நிவாரண குழுக்கள்

ஒடிசாவில் ஃபானி புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மீட்பு பணிகளுக்காக 34 பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண குழுக்களை கடற்படை தயார் நிலையில் வைத்துள்ளது. விசாகப்பட்டினம், சென்னை, கோபால்பூர், ஹால்டா உள்ளிட்ட இடங்களில் பேரிடர் மீட்பு நிவாரண குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும் சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் 4 கடற்படை கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்காளத்தில் கனமழை:

ஃபானி புயல் காரணமாக, மேற்கு வங்க மாநில கடலோர பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்