இந்தியா

குறைந்து வரும் மோட்டார் வாகன விற்பனை... வேலை வாய்ப்பை இழக்கும் இளைஞர்கள் : காரணம் என்ன?

இந்தியாவில் குறைந்து வரும் மோட்டார் வாகன விற்பனையால் இளைஞர்கள் பலரும் வேலை வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

இந்திய மோட்டார் வாகன உற்பத்தித் துறை ஆண்டுதோறும் 8 புள்ளி 5 லட்சம் கோடி பணப்புழக்கத்துடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் மூன்று கோடி பேருக்கு வேலை வாய்ப்பை அளித்து வரும் ஒரு மிகப்பெரிய துறையாக இருந்து வருகிறது. நாட்டில் உள்ள ஐந்து முன்னணி மோட்டார் வாகன நிறுவனங்களில் மட்டுமே நேரடியாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் வேலை செய்து வரும் நிலையில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் மூலமாக 50 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கிறது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கை 7 புள்ளி 2 கோடியாக உயர்ந்து விட்ட நிலையில் புதிய வாகனங்களின் விற்பனை வேகமாக குறைந்து வருகிறது. சுமார் 30 லட்சம் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 5 லட்சம் நான்கு சக்கர வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன... இந்த சூழலில் மத்திய அரசு மின்வாகன உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையாகாமல் தேங்கி கிடக்கும் வாகனங்களை விற்க முடியாமல் உள்ள நிறுவனங்கள், தங்களிடம் பணியாற்றும் பணியாட்களை குறைக்கும் பணியில் இறங்கி உள்ளது .

மோட்டார் வாகனத் துறை வீழ்ச்சியடைந்து வருவதால் நாட்டின் பொருளாதாரம் குறைய வாய்ப்புள்ளதாகவும் வேலைவாய்ப்பு சார்ந்த பல்வேறு பிரச்சினைகளும் உருவாகும் சூழல் உருவாகி உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் முதலீட்டு ஆலோசகர் விவேக். வாகன உற்பத்தி துறையில் தனி கவனத்தை செலுத்தி மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு அரசு எடுத்துச் செல்ல முன்வரவேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாகவும் உள்ளது...

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி