உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் ஆயுதங்கள் ஏற்றுமதி கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கடற்படை மற்றும் ராணுவ தளபதி ஆகியோர் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ தளபதி பிபின் ராவத் நடப்பாண்டு 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பாதுகாப்பு சாதனங்கள் ஏற்றுமதி செய்யும் நிலைக்கு இந்தியா வந்துள்ளதாக தெரிவித்தார். இது வரும் 2024 ஆம் ஆண்டு 35 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என பிபின் ராவத் நம்பிக்கை தெரிவித்தார்.