EVM Machine Opened | வாக்குப்பெட்டி திறப்பு - "ஜனநாயகப் படுகொலை" - தீயாய் பரவும் சிசிடிவி மேற்கு வங்கத்தில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் இல்லாத நேரத்தில் வாக்குப்பெட்டிகள் திறக்கப்பட்டதாக சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு திரிணாமுல் காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ள திரிணாமுல் காங்கிரஸ், இதை பட்டப்பகலில் நடைபெறும் “ஜனநாயகப் படுகொலை என விமர்சித்துள்ளது. மிரட்டல் மற்றும் பணபலம் பலனளிக்காத நிலையில், தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்களில் கைவைக்கும் அளவுக்கு பாஜக தாழ்ந்துவிட்டதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.