ஜூனியர் மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி துன்புறுத்துவதும் ராகிங் என்றே கருதப்படும் என பல்கலைகழக மானிய குழு தெரிவித்துள்ளது.கல்வி நிறுவனங்களில் ராகிங்,பாலியல் துன்புறுத்தல் முற்றிலும் தவிர்க்கபட பல நடவடிக்கைகளை
பல்கலைக்கழக மானிய குழு எடுத்து வருகிறது.இந்நிலையில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதலங்கள் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி ஜூனியர் மாணவர்களை துன்புறுத்துவதும் ராகிங் என்றெ கருதப்படும் எனவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல்கலைகழக மானிய குழு தெரிவித்துள்ளது.