சபரிமலை கோயிலில், பெண்கள் அனுமதிக்கப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. விசாரணையின்போது, கேரள அரசு சார்பில், பெண்களும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஒரு இடத்தில் ஆண்களை அனுமதிக்கும் போது, பெண்களை மட்டும் அனுமதிக்காமல் இருப்பதை இந்திய அரசியல் சட்டம் அனுமதிக்கிறதா என விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியது.