இந்தியா

Election | சிக்கிய ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் - சென்னை வரும் முன்னே வளைத்து பிடித்த பறக்கும் படை

சிக்கிய ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் - சென்னை வரும் முன்னே வளைத்து பிடித்த பறக்கும் படை

thanthitv

புதுச்சேரியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், சாரம் பகுதியில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது சென்னையை நோக்கி சென்ற வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் இருந்த ஐந்து பெட்டிகளில் கோடிக்கணக்கான தங்க நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நகைகள் சென்னை பல்லாவரத்தில் உள்ள நகைக்கடைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து உரிய ஆவணங்கள் கோரப்பட்டு, நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. தற்போது சுங்கத்துறை அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர்.

🔴LIVE : AIADMK | EPS | TN Election | எதிர்பாரா திருப்பம்... பாஜக விஐபி தொகுதிகள் மாற்றம்

🔴LIVE : Anbumani | PMK | அன்புமணி பரபரப்பு பிரஸ்மீட்

🔴LIVE : AIADMK | EPS | TN Election | விஜய்யை எதிர்த்து பெரம்பூரில் யார்?

AIADMK | EPS | நேரடியாக `இரட்டை இலை’ இறங்கும் தொகுதிகள்..EPS அதிரடி அறிவிப்பு

Vijay | ADMK | PMK| பெரம்பூரில் விஜய்யை எதிர்த்து இறங்கும் பாமக - அறிவித்தார் EPS