இந்தியா

கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா

கர்நாடகா முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது.

தந்தி டிவி

கர்நாடகா முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டத்தில் பங்கேற்று பேசிய எடியூரப்பாக, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். தொடர்ந்து உருக்கமாக பேசிய அவர், கட்சிக்காக விசுவாசத்துடன் பணியாற்றுவேன் என்றார். சாதனை விளக்க கூட்டம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, அங்கிருந்து ஆளுநர் மாளிகைக்கு எடியூரப்பாக சென்றார்.

அங்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்த எடியூரப்பா, தனது பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்தார். கர்நாடகாவில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு 2-வது முறையாக எடியூரப்பாக ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்