இந்தியா

தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதாவை மறுஆய்வு செய்ய வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதாவை மறுஆய்வு செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், அணைகள் பாதுகாப்பு மசோதா அண்டை மாநிலங்களில் உள்ள அணைகளின் உரிமை, பராமரிப்பு மற்றும் நிர்வகிக்கும் மாநிலங்களுக்கு இடையிலான உரிமையை பறிக்கும் வகையில் உள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார்.

எனவே அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த அணைகள் பாதுகாப்பு மசோதாவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும், தமிழகம் தெரிவித்த எதிர்ப்புகளை முழுமையாக விவாதிக்காமல், இதுதொடர்பான பணிகளை அவசர கதியில் செயல்படுத்த வேண்டாம் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

அணைகள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வரும் முன்பு அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்தை பெறவேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதுவரை இந்த மசோதாவை சட்டமாக்கும் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் பிரதருக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை