இந்தியா

பயணிகளுக்கு மூச்சுத்திணறல் : அவசரமாக தரையிறங்கிய மும்பை விமானம்

பயணிகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து மும்பையில் இருந்து புறப்பட்ட தனியார் விமானம் அவசரமாக தரையிரக்கப்பட்டது.

தந்தி டிவி

மும்பையில் இருந்து ஜெய்பூருக்கு சுமார் 166 பயணிகளுடன் தனியார் விமானம் புறப்பட்டது. அப்போது கேபின் அழுத்தத்தை பராமரிக்கும் சுவிட்சை ஆன் செய்ய விமானி மறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சில பயணிகளுக்கு காது மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வரத்தொடங்கியுள்ளது. இதனையடுத்து விமானம் அவசர அவசரமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்ட பயணிகள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி