இந்தியா

கருப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்து - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்

கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 9 லட்சம் ஆம்போடெரிசின்-பி மருந்து குப்பிகளை இறக்குமதி செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

கருப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்து - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்

கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 9 லட்சம் ஆம்போடெரிசின்-பி மருந்து குப்பிகளை இறக்குமதி செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில், மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கறுப்புப் பூஞ்சைத் தொற்றை எதிர்கொள்வதில், மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது பாராட்டுக்குரிய விஷயம் என தெரிவித்தார். மேலும், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து அதிக எண்ணிக்கையில் கறுப்பு பூஞ்சை தொற்று பதிவாகி உள்ள நிலையில், 18 மாநிலங்களில் 5 ஆயிரத்து 424 பேர் பாதிப்புக்கு உள்ளாகியதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், கறுப்புப் பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 9 லட்சம் ஆம்போடெரிசின் -பி மருந்து குப்பிகளை இறக்குமதி செய்து வருவதாக தெரிவித்ததோடு, முதற்கட்டமாக 50 ஆயிரம் குப்பிகள் பெறப்பட்டுள்ளதாகவும், ஒரு வாரத்தில் சுமார் 3 லட்சம் குப்பிகள் கிடைக்கப் பெறும் எனவும் தெரிவித்தார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு