இந்தியா

"ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பிக்க அவகாசம்" - ஜூன் 30 வரை அவகாசம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பு

பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பிக்க, ஜூன் 30-வரை அவகாசம் வழங்கி மத்திய அரசு அறிவித்துள்ளது.

தந்தி டிவி

பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பிக்க, ஜூன் 30-வரை அவகாசம் வழங்கி மத்திய அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், வாகன அனுமதி மற்றும் ஓட்டுநர் உரிமம் புதுக்க முடியவில்லை. இந்த நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பித்தல் ஆவணங்கள், ஜூன் 30 வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை மாநில அரசு நடைமுறைப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்