ஒரே மேடையில், ஒரே முகூர்த்தத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்த இளைஞரின் செயல் கர்நாடகாவில் பேசு பொருளாக மாறியுள்ளது. சித்ரதுர்கா நகரைச் சேர்ந்த வசிம் ஷேக் என்ற இளைஞர், ஷைபா ஷேக், ஜன்னத் மக்கந்தர் என்ற இரு பெண்களுடன் ஒரே மேடையில் திருமணம் செய்துள்ளார். அந்த இரு பெண்களும், அவரின் காதலி என்பதும், அவர்களின் சம்மதத்தோடு ஒரே மேடையில் திருமணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அது தொடர்பான புகைப்படம் வெளியான நிலையில், "காத்து வாக்குல இரண்டு கல்யாணம்.." என்று கிண்டலடித்து வருகின்றனர்.